சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு - எடுக்கப்பட்ட நடவடிக்கை
prison
death
suspended
inmate
By Sumithiran
எம்பிலிப்பிட்டிய - கதுருகசர திறந்தவெளி சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
சிறைச்சாலையில் கடமையாற்றிய ஒரு சிறைச்சாலை அதிகாரி மற்றும் இரண்டு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எம்பிலிபிட்டிய - கதுருகசர திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நான்கு வருட சிறைத்தண்டனை அனுபவித்து வந்த சமிந்த ஹெட்டிகே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
