யாழில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்கள் - மூவர் அதிரடி கைது!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Pakirathan
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண நகர பகுதியில் உள்ள வன்பொருள் விற்பனை நிலையம் ஒன்றினை உடைத்து ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடியமை மற்றும் நாவாந்துறை பகுதி ஒன்றில் வீடு உடைத்து பொருட்கள் திருடிய குற்றச்சாட்டில் பொம்மை வெளியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 24 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி