யாழில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து
யாழில் (Jaffna) மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம் (27) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிலும் மோதி விபத்துள்ளானதுடன் அதேசமயம் வீதியில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளொன்றையும் முச்சக்கரவண்டி மோதித் தள்ளியது.
பாரிய சேதங்கள்
இந்த விபத்தில் பாரிய சேதங்கள் இல்லாது தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
குறித்த சந்தியில் நாளாந்தம் தொடர்ச்சியாக வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆகையினால் குறித்த சந்தியில் வீதிச் சமிக்ஞை விளக்கு பொருத்தப்பட வேண்டுமென தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
