புதிய முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் வெளியாகின!
மேற்கு மாகாணத்தில் முச்சக்கர வண்டிக் கட்டணம் இன்று (23) முதல் ரூ. 10 உயர்த்தப்பட்டுள்ளதாக மேற்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை (WPRPTA) அறிவித்துள்ளது.
அதன்படி, முதல் கிலோமீற்றருக்கான தொடக்கக் கட்டணம் ரூ. 100-லிருந்து ரூ. 110-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டாவது கிலோமீற்றர் முதல் ஒவ்வொரு கூடுதல் கிலோமீற்றருக்கான கட்டணமும் ரூ. 80-லிருந்து ரூ. 90-ஆக திருத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கட்டணங்கள்
எரிபொருள் விலை உயர்வால் மாகாணம் முழுவதும் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், அரசாங்கம் பெட்ரோல் விலையை உயர்த்தியிருப்பதைக் கருத்தில் கொண்டு, முதல் கிலோமீற்றருக்கு வசூலிக்கப்படும் முச்சக்கர வண்டிக் கட்டணத்தை ரூ. 20 உயர்த்துமாறு முச்சக்கர வண்டி சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்