திடீரென தீப்பிடித்த முச்சக்கரவண்டி - பயணிகள் அருந்தப்பு(படங்கள்)
புத்தாண்டுக்காக பயணிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி திடீரென தீக்கிரையாகியுள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் நான்கு பேர் பயணித்த போது களுத்துறை கட்டுகுருந்த சந்தியில் முச்சக்கரவண்டி திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதில் இருந்தவர்கள் குதித்து உயிர் தப்பினர்.
களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த நான்கு தீயணைப்புப் படையினர் தீயணைப்பு இயந்திரத்துடன் வருகை தந்த போதிலும் அதற்குள் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியின் இயந்திரக் கோளாறே தீ விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். தலைமையக காவல்துறை பரிசோதகர் ருவன் விஜேசிங்க தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.



