இந்திய வங்கிகளில் விடுதலை புலிகளின் கணக்குகள் - சிங்கள ஊடகம் பரபரப்பு தகவல்
ltte
account
indian banks
By Sumithiran
விடுதலைப் புலிகளின் கணக்குகள் இந்திய வங்கிகளில் இருப்பதை இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு கண்டறிந்துள்ளதாக தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
மும்பையில் உள்ள விடுதலைப் புலிகளின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க முயன்ற கனடாவைச் சேர்ந்த மேரி பிரான்சிஸ் என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வங்கிக் கணக்குகள் டென்மார்க் மற்றும் சுவிஸ் விடுதலைப் புலிகளின் அனுதாபிகளாலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்திய வங்கிகளில் விடுதலை புலிகளின் பணம் இருப்பது இதுவரை தெரியவரவில்லை எனவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
