கொழும்பில் நீதி அமைச்சின் அலுவலகம் முன்பாக பலப்படுத்தப்படும் பாதுகாப்பு!
Sri Lanka Police
Colombo
Sri Lankan protests
Government Of Sri Lanka
By Pakirathan
கொழும்பு - சங்கராஜாமாவத்தையில் அமைந்துள்ள நீதி அமைச்சின் அலுவலகம் முன்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நீதி அமைச்சின் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால், அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் கிடைக்கும் நட்ட ஈட்டினை கொள்ளையடிப்பதற்கு இடம் வழங்காதிருப்போம் என வலியுறுத்தி குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
இருப்பினும் இதுவரை அப்பகுதில் எந்தவித ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகின்றது.





5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி