மாகாண சபை முறை ஒழிக்கப்படும் - மறுக்கும் ரில்வின் சில்வா

13th amendment Sri Lankan Tamils Janatha Vimukthi Peramuna Tilvin silva
By Thulsi Dec 05, 2024 03:32 AM GMT
Report

புதிய அரசியலமைப்பில் சிறந்த தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை 13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்படாது. அது தொடர்பில் சகல தரப்பினருடனும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றே நான் கூறினேன் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

மாறாக மாகாண சபை முறை எவ்வித கலந்துரையாடல்களுமின்றி ஒழிக்கப்படும் என நான் ஒரு போதும் கூறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் (Sri Lanka) நடைமுறையில் உள்ள அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்குக் கொண்டு வரவும் புதிய அரசமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கு சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என அண்மையில் அவர் தமிழ் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய காரணமல்ல : அரசாங்கம் சுட்டிக்காட்டு

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய காரணமல்ல : அரசாங்கம் சுட்டிக்காட்டு

13ஆவது அரசமைப்பு திருத்தம்

சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.  இந்த செய்தியில், ”தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதாகக் கூறிய இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13ஆவது அரசமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது.

மாகாண சபை முறை ஒழிக்கப்படும் - மறுக்கும் ரில்வின் சில்வா | Tilvin Silva About 13Th Amendment Implementataion

அந்த ஒப்பந்தத்தை ஆரம்ப காலத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வந்துள்ளோம். நாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும் அமைச்சரவையில் கூட அனுமதி பெறாமலுமே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இருப்பினும் அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசமைப்பின் ஊடாக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமையால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டம் : தமிழரசுக்கட்சி எம்பிக்களுக்கு ஜனாதிபதி அளித்த உறுதிமொழி

பயங்கரவாத தடைச்சட்டம் : தமிழரசுக்கட்சி எம்பிக்களுக்கு ஜனாதிபதி அளித்த உறுதிமொழி

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள்

மாறாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான சூழலே காணப்படுகின்றது.

மாகாண சபை முறை ஒழிக்கப்படும் - மறுக்கும் ரில்வின் சில்வா | Tilvin Silva About 13Th Amendment Implementataion

எனவே, பயனற்ற மாகாண சபை முறைமைக்குப் பதிலாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறக் கூடியதும் அனைத்து இன மக்களுக்கும் சமமாக உரிமையைப் பெற்றக்கொள்ளும் வகையில் புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியில் தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படுகின்றது.

புதிய அரசமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கும். அப்போது 13வது அரசமைப்பு திருத்தமோ அல்லது மாகாண சபை முறைமைக்கான தேவையோ நாட்டில் இருக்காது." என ரில்வின் சில்வா கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வடக்கு மக்களின் சிக்கல்

இந்த நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ரில்வின் சில்வா வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க 1987 இல் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தம் தவறியுள்ளது. 

மாகாண சபை முறை ஒழிக்கப்படும் - மறுக்கும் ரில்வின் சில்வா | Tilvin Silva About 13Th Amendment Implementataion

அதனால் வடக்கு மக்களின் சிக்கல்களை தீர்த்து வைக்க மிகவும் நடைமுறைச் சாத்தியமானது சரியானதுமான தீர்வினை முன்வைக்க வேண்டியுள்ளது. 

அத்தகைய மிகச் சிறந்த தீர்வினை முன்வைத்து நடைமுறைப்படுத்தும் வரை 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபை களையும் ஒழிக்கப்போவ தில்லை என்றே நான் கூறினேன். 

மேற்படி புதிய தீர்வுகள் எதிர்காலத்தில் கலந்துரையாடலுக்கு இலக்காக்கப்படுகின்ற அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும். 

அந்த தீர்வு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும். எனது செய்தி திரிபுபடுத்தப்பட்டுள்ளது என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

ரணில் வழங்கியுள்ள 361 மதுபானசாலை உரிமங்கள்: நாடாளுமன்றில் முற்றாக அம்பலம்

ரணில் வழங்கியுள்ள 361 மதுபானசாலை உரிமங்கள்: நாடாளுமன்றில் முற்றாக அம்பலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்

நுவரெலியா, மட்டக்களப்பு, கொழும்பு, Michigan, United States

11 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

11 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Thampalai, பிரான்ஸ், France, London, United Kingdom

13 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், பாண்டியன்தாழ்வு, Fontainebleau, France

13 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, England, United Kingdom, கொழும்பு

11 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

23 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025