கம்பஹா பிராந்திய அலுவலகத்தில் ரூ.100 இலஞ்சம் பெற்றதாக அதிகாரி கைது
ரூபாய் 100 இலஞ்சப் பணத்தைக் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், கம்பஹா பிராந்திய அலுவலகத்தில் பணியாற்றும் வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நேர அட்டவணை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (20.10.2026) நண்பகல் 12.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால், ரத்தொலுகம பேருந்து நிலையத்திலுள்ள நேர அட்டவணை அதிகாரியின் அறையில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
100 ரூபா இலஞ்சம்
ரத்தொலுகமவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் 188ஆம் இலக்க பேருந்தின் பயணத்தை உரிய நேரத்தில் ஆரம்பிக்காமல் தாமதமாக ஆரம்பிப்பதற்கும், சாதகமான முறையில் பயணத்தை ஆரம்பிக்க அனுமதி வழங்குவதற்கும், குறித்த பேருந்தின் ஊழியர் ஒருவரிடம் சந்தேகநபர் 100 ரூபாவை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்பத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |