விடுதலைப் புலிகள் மேல் குற்றம் சாட்டப்பட்டால்.. - கருணா மீது நடவடிக்கை
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால், அதற்காக கருணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாக்க வேண்டும் என்றும் மனிதப் புதைகுழிகள் தோண்டப்படும் போது வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் மத்தியில் அச்சம்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயிலிருந்து பல மனித எச்சங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில் அதில் தமது உறவுகளும் இருக்கலாமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அகழ்வின் போது சர்வதேச விதிமுறைகளை கடைபிடித்து வெளிநாட்டு நிபுணர்கள், தடயவியலாளர்கள் ஆகியோரின் உதவிகளையும் பெற வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விடயத்தில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த காவல்துறையினர் தயக்கம் காட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
YOU MAY LIKE THIS
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 4 மணி நேரம் முன்