பதவி நீக்கப்பட்டார் முதலமைச்சர் விஜய்யின் ஜோதிடர்...!
Vijay
Tamil nadu
India
By Shalini Balachandran
தமிழக முதலமைச்சர் விஜய்யின் ஜோதிடரான ரிக்கி ரத்தன் பண்டித் வெற்றிவேலை, தமிழ்நாடு முதலமைச்சரின் (அரசியல்) விசேட பணி அதிகாரியாக (Officer on Special Duty) நியமித்த உத்தரவைத் தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
ரிக்கி ரத்தன் பண்டித் வெற்றிவேலுக்கு குறித்த நியமனம் வழங்கப்பட்டமை அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் நேற்று (12-05-2026) வெளியிட்டிருந்தார்.
அரசுப் பதவி
இந்த நிலையில், ரத்தன் பண்டித் ஒரு ஜோதிடர் எனத் தெரிவிக்கப்படும் நிலையில் அத்தகைய ஒருவருக்கு அரசுப் பதவியில் இடமளிப்பது முறையல்ல என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இதன் தொடர்ச்சியாக குறித்த நியமன உத்தரவைத் தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி