கூட்டமைப்பின் உடைவு இதற்காகத் தான் - சுயேச்சை குழு வேட்பாளர் வெளியிட்ட தகவல்
சுயேச்சை குழுக்களுடைய வாக்குகளை உடைப்பதற்காகவே கூட்டமைப்பு உட்பட சில அரசியல் கட்சிகள் பிரிந்து போட்டியிடுகின்றது என சுயேச்சை குழு வேட்பாளர் துரைராஜா சுஜீந்தன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்திய பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்குரிய சந்தர்ப்பம்
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் கட்சிகள் தங்களுக்குரிய நபர்களை மாத்திரம் இனம்கண்டு வர்க்க ரீதியான செயல்பாடுகளை செய்து வருகின்றார்கள்.
உண்மையிலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்குரிய சந்தர்ப்பத்தை கொடுப்பது வலு குறைவாக இருக்கின்றது.
அந்த வகையிலேயே தான் நாங்கள் கடந்த காலங்களிலே சுயேச்சை குழுவாக அந்த மக்களுக்கு உரிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காக களமிறங்கி இருந்தோம்.
அரசியல்வாதிகள் தங்களுடைய சுய இலாபங்களுக்காக சில வேலைத்திட்டங்களை செய்து வருகின்றார்கள் என்பதை கண்ணூடாக காணக்கூடிய விடயம்.
இன்றைய நிலைமையை பொறுத்தவரையில் அரசியல்வாதிகள் கூட தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் பிரிந்து சுயேட்சையாக கேட்கின்ற நிலைமை தோன்றி இருக்கின்றது.
சுயேட்சையாக இறங்கி வெற்றி பெற்ற எங்களுடைய வாக்குகளை உடைக்க வேண்டும் என்பதற்காக சுயேட்சியாக களம் இறங்க தீர்மானித்திருக்கின்றார்கள்.
தமிழர்களுடைய வாக்குகள்
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட சில கட்சிகளும் அவ்வாறே இறங்கி இருக்கின்றார்கள்.
சிறுபான்மை தமிழர்களுடைய வாக்குகள் எல்லாம் தங்களுக்குத்தான் எல்லாம் சேர வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காக இந்த விடயங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நாங்கள் அதையெல்லாம் கடந்து இந்த இடத்திலே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்துக்காகத்தான் சுயேச்சை குழுவாக களமிறங்குவதற்காக இன்று கட்டப்பணத்தை செலுத்தி இருக்கின்றோம்” - என தெரிவித்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
