இறுதி தருணத்தில் கையை விரித்த கோட்டாபய - ஏமாற்றத்தில் கூட்டமைப்பு
meeting
tna
gotabaya
cancel
By Vanan
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடத்த இருந்த பேச்சுவார்த்தை இறுதி தருணத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
நாளை மாலை 4 மணிக்கு இந்தச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற இருந்தது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கோரிக்கைக்கு அமைய இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டிருந்தன.
எனினும் ஊடகங்கள் மூலமாக சந்திப்பு தொடர்பான செய்திகள் வெளியான காரணத்தினால் சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டது என்று ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் நேற்று ரத்துச் செய்யப்பட்ட சந்திப்பு பிறிதொரு நாளில் நடத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கூட்டமைப்பினருக்கு தகவல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்