கூட்டமைப்பு - கோட்டாபய சந்திப்பு இன்று
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பு திட்டமிட்டவாறு இன்று இடம்பெறும் என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐ.பி.சி. தமிழ் செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, காணி விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அரச தலைவருடன் ஆராயப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இது ஒருபுறமிருக்க, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரச தலைவருக்குமிடையே இடம்பெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன், தமிழரசு கட்சிக்குள்ளும் எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லையென சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர் சி.அ.ஜோதிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
அரச தலைவர் அழைத்தவுடன் விழுந்தடித்துக்கொண்டு செல்வதற்கு தமிழர் விவகாரம் சம்பந்தனின் குடும்ப விவகாரம் அல்லயெனவும் யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.
