திடீர் பதவி விலகலை அறிவித்த கூட்டமைப்பின் உறுப்பினர்!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர் யோ.இருதயராஜா திடீரென பதவி விலகலை அறிவித்துள்ளார்.
இந்த பதவி விலகல் அறிவிப்பு இன்று திங்கட்கிழமை காலையில் வெளியாகியுள்ளது.
இன்றைய தினம் பருத்தித்துறை நகர சபையில் 2023 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெறவிருந்த நிலையில் அவர் திடீரென தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
பதவி விலகல்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் ஏனைய கட்சியினர் தனது பாதீட்டுக்கு எதிர்த்து வாக்களிக்க உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து தான் ராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான பருத்தித்துறை நகரசபை வரவு செலவு திட்டத்தை 2022 டிசம்பர் 05ம் திகதி பருத்தித்துறை நகர சபையின் தலைவர் யோ.இருதராஜா சபையில் சமர்ப்பித்தார்.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக ஏழு வாக்குகளும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக எட்டு வாக்குகளும் பதிவாகி வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தது.
தோல்வி
15 உறுப்பினர்களை கொண்ட பருத்தித்துறை நகரசபையில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சியின் 4 பேரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சுயேட்சை கட்சிகளில் தலா ஒருவருமாக வாக்களித்தனர்.
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 பேரும் தமிழரசுக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தலா ஒருவரும் வாக்களித்தனர்.
பருத்தித்துறை நகரசபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 5 ஆசனங்களையும்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 ஆசனங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சுயேட்சை தலா ஒரு ஆசனங்களையும் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

