சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயல்படும் தமிழ் எம்.பிக்கள் : குற்றம் சாட்டும் மொட்டு கட்சி!
சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சாட்டியுள்ளது.
இதன்படி, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கமையச் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் செயல்படுவதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயல்படும் தமிழ் அரசியல்வாதிகள் விரும்பும் அரசியல் தீர்வை வழங்க சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒரு போதும் இடமளிக்காது என சாகர காரியவசம் திட்டவட்டதாக கூறியுள்ளார்.
எல்லை மீறிய தமிழ் அரசியல்வாதிகள்
சிறிலங்கா அதிபருடனான சந்திப்பின் போது, சம்பந்தனும் சுமந்திரனும் எல்லை மீறிய கருத்துக்களை வெளியிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பின்னணியில், அரசியலமைப்பை மீறி எதனையும் செய்ய முடியாது என்பதை அரசியலில் முதிர்ச்சி பெற்ற குறித்த இருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இறுதியாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது 4 தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரம் பங்கேற்றிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் எனவும், இல்லையேல் தாம் சர்வதேசத்தை நாடுவதாகவும் இந்த சந்திப்பின் போது சம்பந்தன் எச்சரிக்கை விடுத்ததாக சாகர காரியவசம் கூறியுள்ளார்.
எனினும், அது ஒருபோதும் சாத்தியப்படாத விடயமெனவும், சர்வதேசத்தை நம்பி ஏமாறாதீர்கள் எனவும் சம்பந்தன் மற்றும் சுமந்திரனுக்கு அவர் எடுத்துரைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |