சுயாதீனமாக செயல்படத் தயாராகும் ரெலோவும் புளெட்டும்!!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளெட் கட்சிகள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளன.
கட்சி என்ற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்படுகின்ற உறுப்பினர்களுக்கான விவாதத்திற்கான நேரப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் சுயாதீனமாக செயற்பட எதிர்பார்த்துள்ளதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் யோசனை தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுக்கவுள்ளதாக புளெட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தனர்.
இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சி என்ற ரீதியில் கலந்துரையாடி தீர்மானத்தினை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் அறிவிக்கவுள்ளதாக ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்
குறிப்பிட்டார்.