நாளையதினம் ரணிலுடன் பேசப்படவுள்ள முக்கிய விடயங்கள் - சுமந்திரன் வெளியிட்ட தகவல்
வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விரைவாக விடுவித்தல், அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் அரசியல் தீர்வின் பரிணாமத்தை இலக்காகக் கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிபர் ரணில் விக்ரமசிங்கவை நாளை மாலை சந்திக்கவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
தான் உட்பட, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரை உள்ளடக்கியதாக ச்திப்பு இடம்பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மூன்று விடயங்களில் பேச்சுக்கள்
அதிபர் ரணிலுடன் முன்னர் இரண்டு சந்திப்புகள் நடத்தப்பட்டதாகவும், மூன்று விடயங்களில் பேச்சுக்கள் தொடரும் என்றும் அவர் கூறினார்.
காணிகளை பூர்வீக குடியிருப்பாளர்களுக்கு விடுவிப்பது தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து அதிபர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசியலமைப்பின் விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவது கலந்துரையாடப்படும் மற்றொரு அம்சமாகும்.
இந்தியாவின் கோரிக்கை
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் பிரகாரம் அமைக்கப்பட்ட மாகாண சபைகள் 2017 ஆம் ஆண்டு முதல் சட்டப் பிழையினால் செயலிழந்துள்ளன. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக 13வது திருத்தம் இணைக்கப்பட்டது. அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
