டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் - இன்றைய நாணயமாற்று விகிதம்!
இன்றையதினத்திற்கான நாணய மாற்று விகிதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த காலங்களில் கணிசமாக அதிகரித்த நிலையில் தற்போது சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு இன்று மேலும் வலுவிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மத்தியவங்கி அறிக்கை
இன்றைய தினம் (12) டொலரொன்றின் கொள்வனவு விலை 311.56 ரூபாவாகவும், விற்பனை விலை 327.17 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அந்தவகையில், இன்றைய தினம் (12) யூரோவொன்றின் கொள்வனவு விலை 339.22 ரூபாவாகவும், விற்பனை விலை 358.58 ரூபாவாக காணப்படுகின்றது.
அதேசமயம், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தளம்பல் நிலையில் உள்ளது.

