டிக்கோயாவைச் சேர்ந்த இளைஞன் மட்டக்களப்பில் சடலமாக மீட்பு
இளைஞன் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு காவல்துறை பிரிவிலுள்ள தனியார் விடுதி ஒன்றில், தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டிக்கோயா, லோவர் டிவிசனைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் விடுதி ஒன்றில் வாடகைக்கு அறை எடுத்து அங்கு தங்கியிருந்து, மட்டக்களப்பிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் தொழில் புரிந்து வந்ததாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
பிரேத பிரிசோதனை

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான பீற்றர் போலின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டார்.
பிரேத பிரிசோதனையின் பின்னர் சடலத்தினை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைககும் படி காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.