தொடர்ச்சியாக அதிகரிக்கும் பிரித்தானிய பவுண்ட்டின் பெறுமதி! இன்றைய நாணய மாற்றும் விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய (ஒக்டோபர் 13) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டொலரின் பெறுமதி
இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 359 ரூபா 81 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 370 ரூபா 71 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 370.42 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 359.69 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய பவுண்ட்
இதேவேளை, ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.
ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 421 ரூபா 86 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 405 ரூபா 95 சதமாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி நேற்றைய தினம் 412 ரூபா 32 சதமாக பதிவாகியிருந்ததுடன் இன்று சடுதியாக அதிகரித்துள்ளது.
அத்துடன், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 364 ரூபா 89 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு பெறுமதி 350 ரூபா 05 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

