சடுதியாக வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை - இன்றைய தங்க விற்பனை நிலவரம்!
நாட்டின் பொருளாதார நிலவரத்துக்கு அமைய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கங்களுடன் நாளாந்தம் பதிவாகி வருகின்றது.
அந்தவகையில், தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 578,531 ரூபாவாக காணப்படுகின்றது.
முழு விபரம்
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 163,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 149,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேசமயம், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 142,900 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,410 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 18,710 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 17,860 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நிலவரம்
கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்றைய ஆபரண தங்கத்தின் விலை 150,000 ரூபாவை விட குறைவடைந்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 149,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 161,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்று 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 150,800 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 170,000 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
ஆபரண தங்கத்தின் விலையானது கடந்த சில கிழமைகளுக்கு முன் 160,000 ரூபாவிற்கும் அதிகமாகவிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.
இலங்கையில் தங்க நகை விலையை நிர்ணயிப்பது உலக சந்தையில் காணப்படும் தங்க விலையும், இலங்கையில் நிலவும் டொலரின் பெறுமதியுமே ஆகும் என அகில இலங்கை தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் சுட்டிக்காட்டியுள்ளார்.
