தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்: விலையில் திடீர் மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலை (gold price) ஏற்றத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி நிலை நிலவுகிறது.
இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 641,889 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய நிலவரம்
இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 181,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 166,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) ஒன்றின் விலை இன்றையதினம் 158,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்கச் சந்தை எழுச்சி
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கிடையிலான போரினால் முதலீட்டு உலகம் அதிர்ந்து போயுள்ளது.
இதனால், தங்கம் மற்றும் கச்சா எண்ணெயின் விலையில் சடுதியான மாற்றம் ஏற்பட்டு வருகின்றது.
புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது.
தங்கம் அலகு தங்க விலை
தங்க அவுன்ஸ் ரூ. 641,889.00
24 கரட் 1 கிராம் ரூ. 22,650.00
24 கரட் 8 கிராம் (1பவுண்) ரூ. 181,150.00
22 கரட் 1 கிராம் ரூ. 20,770.00
22 கரட் 8 கிராம் (1பவுண்) ரூ. 166,100.00
21 கரட் 1 கிராம் ரூ. 19,820.00
21 கரட் 8 கிராம் (1பவுண்) ரூ. 158,550.00
செட்டியார்தெரு நிலவரம்
கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி,
இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 160,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 24 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 173,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.