தொடர் வீழ்ச்சி காணும் தங்கத்தின் விலை - இன்றைய தங்க விற்பனை நிலவரம்!
நாட்டின் பொருளாதார நிலவரத்துக்கு அமைய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கங்களுடன் நாளாந்தம் பதிவாகி வருகின்றது.
அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது தொடர் வீழ்ச்சி கண்டு வருகிறது.
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 583,166 ரூபாவாக காணப்படுகின்றது.
முழு விபரம்
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 164,600 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 150,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 144,100 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,580 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 18,870 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 18,010 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நிலவரம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சி ஆகியன காரணமாக தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, 22 கரட் கொண்ட ஒரு பவுண் தங்கத்தின் விலையானது 150,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் கொண்ட ஒரு பவுண் தங்கத்தின் விலையானது உள்ளூர் சந்தையில் 163,000 ரூபாவிற்கும் 164,000 ரூபாவிற்கும் இடையில் பதிவாகியுள்ளது.
உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிடத்தக்க அளவில் கணிசமாக குறைந்திருந்த போதிலும் மீண்டும் அதிகரித்த போக்கில் காணப்பட்டிருந்தது.
