இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு!
தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீடானது அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு, எரிபொருள் தேவை அதிகம் என்பதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இன்றையதினம் (4) நள்ளிரவு முதல் குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எரிபொருள் ஒதுக்கீடு
இதனடிப்படையில், முச்சக்கர வண்டிகளுக்கு 8 லீற்றராகவும், உந்துருளிகளுக்கு 7 லீற்றராகவும், பேருந்துகளுக்கு 60 லீற்றராகவும், மகிழுந்துகளுக்கு 30 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாரவூர்திகளுக்கு 25 லீற்றராகவும், சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 30 லீற்றராகவும், வேன்களுக்கு 30 லீற்றராகவும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தேவையான எரிபொருள் இருப்புக்களை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்பதிவுசெய்து பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எனவே, மக்கள் எவ்வித சிரமமும் இன்றி தமக்குரிய எரிபொருளை பண்டிகைக் காலத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
