மாவீரர் நினைவேந்தல் : நாடாளுமன்றத்தில் வெடித்தது முறுகல்!

Tamils Parliament of Sri Lanka Gajendrakumar Ponnambalam Shanakiyan Rasamanickam Tiran Alles
By Kirupa Dec 05, 2023 03:18 PM GMT
Report

 தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள், தொடர்பாக சிறி லங்கா பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோருக்கும் இடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள், பயங்கரவாத்தின் தோற்றப்பாட்டையே எடுத்துக் காட்டியுள்ளதாகவும் அவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறக் கூடாது எனவும் சிறி லங்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரிரான் அலெஸ் இன்றைய ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது உரையாற்றிய போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ரிரான் அலெஸ் - சிறி லங்கா பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் (பயங்கரவாத தடைச் சட்டம், இந்த நாட்டில் உள்ள பலருக்கு விருப்பம் அற்ற ஒன்றென அவர் கூறினார்.அதனை அங்கீகரிக்கவில்லை எனவும் கூறினார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகராக எவருமே வர முடியாது! கமல் குணரத்ன அதிரடி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகராக எவருமே வர முடியாது! கமல் குணரத்ன அதிரடி

பயங்கரவாத தடைச் சட்டம்

அந்த கருத்துடன் தாம் உடன்படவில்லை.பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து சர்வஜென வாக்கெடுப்பொன்றை நடத்தினால் அதன் முடிவு எவ்வாறு இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும்.

மாவீரர் நினைவேந்தல் : நாடாளுமன்றத்தில் வெடித்தது முறுகல்! | Today Parliament Heroes Commemoration Chanakiyan

எனினும் பயங்கரவாத தடைச் சட்டம் சரியானது என நான் இங்கு கூறவரவில்லை. எனினும் நீங்கள் வெளியிட்ட கருத்துக்கள் குறித்தே நான் இங்கு கூறுகின்றேன்.நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நான் கூறுவதற்கு விரும்புகின்றேன்.

இவர்கள் தொடர்ச்சியாக கூறுகின்றனர், ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், எனினும் 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.எனினும் மூன்று நீதிமன்றங்கள், இவ்வாறான விடயங்களை செய்ய வேண்டாம் என உத்தரவுகளை வழங்கியிருந்தன.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நினைவேந்தல்களை செய்வதை தடுக்கும் வகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக சட்டமா அதிபரும் உறுதி வழங்கியிருந்தார்.

நான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் கூறும் விடயம், தமது குடும்பத்தில் உயிரிழந்தவர்களை சென்று நினைவுகூர முடியும்.நாமும் செல்கின்றோம். தந்தை, தம்பி ஆகியோரின் கல்லறைகளுக்கு செல்கின்றேன்.

அனைவருக்கும் அவ்வாறு செல்ல முடியும்.எனினும் வேறு ஒருவரின் பிறந்த தினமன்று நான் கல்லறைக்கு செல்வதில்லை. நான் எனது கட்சி கொடியை கல்லறைக்கு கொண்டுசெல்வதில்லை.

வீதி மறிப்பு போராட்டத்தில் நாம் ஈடுபட மாட்டோம்: பொறியியல் பீட மாணவர்கள் அறிக்கை!

வீதி மறிப்பு போராட்டத்தில் நாம் ஈடுபட மாட்டோம்: பொறியியல் பீட மாணவர்கள் அறிக்கை!

பிரபாகரனின் பிறந்த நாள்

இந்த கொடிகளை பல்வேறு கட்சிகளும் பயன்படுத்துவதாக கூறுகின்றீர்கள்.எனினும் சாதாரண மக்கள் கல்லறைகளுக்கு கொடிகளை கொண்டுசெல்வதில்லை. தமது உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர செல்லும் போது கொடிகளை கொண்டுசெல்வதில்லை.

மாவீரர் நினைவேந்தல் : நாடாளுமன்றத்தில் வெடித்தது முறுகல்! | Today Parliament Heroes Commemoration Chanakiyan

பிரபாகரனின் பிறந்த நாளில் அந்த கொடியை கொண்டு, அதிகளவான மக்கள் செல்கின்றமை, தத்தமது குடும்பத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு அல்லவே.அது தெளிவாக தெரிகின்றது.மறுபுறம் இது கிழக்கில் இடம்பெறவில்லை.

சில இடங்களில் உடைகள் அணிந்துசெல்வதை பாருங்கள்.) இதன்போது குறுக்கிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இதுபோன்ற ஒரு சம்பவவே இடம்பெற்றதாகவும் மட்டக்களப்பில் 11 பேர் கைதுசெய்யப்பட்டதை தொடர்பாக தெளிவுபடுத்துமாறும் சுட்டிக்காட்டினார்.

எனினும் தமது உரை நிறைவடைந்த பின்னர் கருத்துத் தெரிவிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரிரான் அலெஸ், வலியுறுத்திய நிலையில், வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன.

இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டு

நீங்கள் அனைவரும் உரையாற்றும் போது நான் குறுக்கிடவில்லை என அமைச்சர் கூறிய நிலையில், மட்டக்களப்பில் இடம்பெற்ற விடயத்தையும் வடக்கில் இடம்பெற்ற ஒரு விடயத்தையும் தொடர்புபடுத்து முயற்சிப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாவீரர் நினைவேந்தல் : நாடாளுமன்றத்தில் வெடித்தது முறுகல்! | Today Parliament Heroes Commemoration Chanakiyan

நிழற்படங்களை காண்பித்த பின்னர் நீங்கள் உற்சாகமடைந்துவிட்டீர்கள் என கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பார்த்தக் கூறிய ரிரான் அலெஸ், இதுபோன்ற விடயங்களை நீங்களே ஊக்குவிக்கின்றீர்கள் எனவும் கூறியுள்ளார்.

பிரபாகரனின் படத்துடன் ஆடை அணிந்து சென்ற விடயம் தனியொரு சம்பவம் எனவும் அதனை மட்டக்களப்பில் இடம்பெற்ற கைதுகளுடன் தொடர்புபடுத்த வேண்டாம் எனவும் இரா.சாணக்கியனும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.

எனினும் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பாக கதைக்கும் போது, மட்டக்களப்பில் இடம்பெற்ற விடயம் குறித்து மாத்திரம் தம்மால் விளக்கமளிக்க முடியாது எனவும் ரிரான் அலெஸ் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தாம் விரும்பியவாறே பதில் அளிப்பேன் எனவும் உங்களுக்கு விரும்பமானது போன்று பதில் அளிக்க முடியாது எனவும் சிறி லங்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகள்

நாடாளுமன்றம் உட்பட அனைத்தையும் உங்களால் கட்டுப்படுத்த முடியும் என நீங்கள் நினைக்கின்றீர்கள் என குறிப்பிட்ட ரிரான் அலெஸ், அன்றைய தினத்தில் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நிகழ்வுகளே இந்தப் படங்கள் காட்டுகின்றன என சுட்டிக்காட்டினார்.

மாவீரர் நினைவேந்தல் : நாடாளுமன்றத்தில் வெடித்தது முறுகல்! | Today Parliament Heroes Commemoration Chanakiyan

(இதுபோன்ற விடயங்களை எடுத்துப் பார்க்கும் போது, பயங்கரவாதத்துடன் தொடர்பில்லை., தமிழீழ விடுதலை புலிகளின் கருத்துக்களுடன் தொடர்பில்லை என யாராலும் கூற முடியாது.

ஆகவே இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறும் போது, குறிப்பாக கேக் தொடர்பிலும் சாணக்கியன் உரையாற்றும் போது கூறினார் எனவும் ரிரான் அலெஸ் குறிப்பிட்டார்.

எனினும் இடையில் குறுக்கிட்ட இரா.சாணக்கியன், தாம் கூறும் கருத்துக்கள் தொடர்பாக பிரச்சினை இருக்குமாயின், அது குறித்து தனது உரையின் பின்னர் கேள்வி எழுப்புமாறு அமைச்சர் கூறினார்.

எமக்கும் ஒரு சில நிமிடங்களை தர வேண்டும். அல்லாவிடின் ஒத்திவைப்பு வேளை பிரேரணை மூலம் நாட்டிற்கு தவறான தகவல் பரப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

எனினும் அவ்வாறு தவறான கருத்து கொண்டுசெல்லப்படாது, இந்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணைக்கு அரை மணிநேரமே உள்ளதாகவும் இருதரப்பினருக்கும் 15 நிமிடங்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது எனவும் பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

இதுபோன்று செய்வதற்கு இடமளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் இருந்த சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டதுடன், ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை தொடர்பான நிலையியல் கட்டளையின் கீழ் அமைச்சர் பதில் அளிப்பதாகவும் அதற்கு மாறாக செயற்பட முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த குறிப்பிட்டுள்ளார்.

நினைவேந்தல் 

நாம் உண்மையான விடயங்களை முன்வைக்கும் போது, சிலருக்கு அதனை கேட்டுக்கொண்டிருப்பது கடினமாக உள்ளது என சிறி லங்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மாவீரர் நினைவேந்தல் : நாடாளுமன்றத்தில் வெடித்தது முறுகல்! | Today Parliament Heroes Commemoration Chanakiyan

இதுபோன்ற விடயங்களை செய்வதற்கு இடமளிக்காமல் இருப்பது தொடர்பாக நீங்களும் தெரிந்திருக்க வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரை நோக்கி அமைச்சர் ரிரான் அலெஸ் சுட்டிக்காட்டினார்.

தாம் முன்னர் கூறியதை போன்று நினைவேந்தல் என்பது ஒரு விடயம் எனவும் கொடிகளை கொண்டுசெல்வது, பிரபாகரனின் படத்துடன் கேக்கை கொண்டுசெல்வது, பிரபாகரனின் படத்துடன் ஆடைகளை அணிவது, போன்ற விடயங்களை நீங்களே தடுத்து நிறுத்த வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கம் தொடர்பாக நீங்கள் கதைக்கின்றீர்கள், ஒரு பக்கமாக இந்த விடயம் செய்யப்பட்டால். அந்த விடயத்தில் தீர்வொன்றை பெற முடியாது எனவும் ரிரான் அலெஸ் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்காவிடின், காவல்துறையினரும் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டிய தேவை ஏற்படாது எனவும் ரிரான் அலெஸ் மேலும் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023