இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்
இன்றைய நாளுக்கான (21.05.2025) நாடாளுமன்ற அமர்வு காலை 09.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறவுள்ளது.
சபாநாயகர் தலைமையில் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்படவுள்ளன.
அதன்படி, காலை 9.30 முதல் 10 மணி வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் காலை 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டள்ளது.
காலை11.30 முதல் மாலை 5.00 வரை 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை அங்கீகரிக்கப்படவுள்ளதுடன், 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் அறிவித்தல் அங்கீகரிக்கப்படவுள்ளது.
மாலை 5.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் நாளை (22), ஏனைய விடயங்களுடன், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் உள்ள ஒழுங்குமுறைகள் தொடர்பான விவாதம் நடத்தப்படவுள்ளது.
எதிரவரும் வெள்ளிக்கிழமை (23), குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை (திருத்த) யோசனையின் இரண்டாம் வாசிப்பு, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
