பெண் தொழிலதிபரை கடத்தி கொலை மிரட்டல் விடுத்து கொள்ளை
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
பெண் தொழிலதிபர் ஒருவரை பலவந்தமாக கடத்தி கொலை மிரட்டல் விடுத்து கொள்ளையடித்த நபர் நொச்சியாகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் குருந்தன்குளம் மாத்தளை சந்தியில் வசிக்கும் 48 பெண் தொழிலதிபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கணவரிடமிருந்து சட்டரீதியாகப் பிரிந்து பண்டாரவளையில் வியாபாரம் செய்து வரும் பெண் தொழிலதிபர், அனுராதபுரம் குருந்தன்குளம், மிஹிந்தலை ஆகிய பகுதிகளில் மளிகைச் சந்தை, உணவகம் போன்றவற்றை நடத்தி வருவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அனுராதபுரம், தலாவ, குமார எலிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நொச்சியாகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்