திருகோணமலையில் அத்துமீறிய பெரும்பான்மையினர் - வேடிக்கை பார்க்கும் முப்படை!
திருகோணமலை நகர் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் வேலியிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலப்பகுதியில் தாய்லாந்திலிருந்து பெளத்த துறவிகளது வருகையுடனான புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை எதிர்க்கும் முகமாக தொடர்ச்சியாக இரு நாட்களாக தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அத்துமீறிய பெரும்பான்மையினர்
இந்தநிலையில், இன்று காலை திருகோணமலை மணிக்கூண்டு கோபுரத்திற்கு முன்பாக ஒன்று கூடிய பெரும்பான்மை இனத்தவர்கள் காவல்துறை மற்றும் இராணுவ தடுப்பு அரண்களை உடைத்துக்கொண்டு குறித்த தொல்பொருள் அடையாளப்படுத்தப்பட்ட நிலத்தினை ஆக்கிரமித்தனர்.
தொடர்ச்சியாக அங்கு ஒன்று கூடிய 200 க்கும் மேற்பட்ட பெரும்பான்மை இனத்தவர்கள் அங்கு அமைந்துள்ள அரச மரங்களைச் சுற்றி கொடிகளை கட்டியும், அங்குள்ள மர இலைகளைக் கட்டியும் அங்கு சமய வழிபட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
