அதிகரித்த வெப்பநிலை: இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
தற்போது நாட்டில் காணப்படும் வெப்பநிலை காரணமாக இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் பொருத்தமானது என சுகாதார அமைச்சின் மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ(Renuka Jayatissa) தெரிவித்துள்ளார்.
மேலும், அதிக சூரிய ஒளி கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் வெளியே செல்லும் போது கறுப்பு கண்ணாடி அணிந்து செல்வது மிகவும் பொருத்தமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்களில் அதிகப்படியான வெயிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், சருமத்தில் சூரிய ஒளி ஊடுருவாமல் தடுக்கும் கிரீம்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை
அத்துடன் தர்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரி போன்றவற்றில் பானங்கள் தயாரித்து குடிக்குமாறுகேட்டுக்கொண்டுள்ளார், இவற்றை உட்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும் என்றார்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் சிலர் மயக்கமடைந்து விடுகிறார்கள் எனவும் கூறினார்.
மேலும், வெயிலில் பயணம் செய்யும் போது தொப்பி அணிய வேண்டும். இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம். பருத்தி ஆடைகள் போன்ற லேசான ஆடைகளை அணியுங்கள் என அறிவுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |