சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
புதிய இணைப்பு
கேகாலை (Kegalle) மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பதுளை, காலி, களுத்துறை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால், மண்சரிவின் நிலை மோசமாக இருக்கலாம் என்பதால், வீதியில் செல்லும் சாரதிகள் மற்றும் பாதசாரிகள் தங்கள் பாதுகாப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று இரவு 11.30 மணி வரை நடைமுறைக்கு வரும் வகையில் கடுமையான இடி மின்னலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதிகமான கனமழை
இதன்படி, மேல், தென், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பலத்த மழையுடன் கூடிய வானிலையால் 73 பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்பது நீர்த்தேக்கங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |