வெளிநாடு ஒன்றுக்கு விசா இல்லாத அனுமதியை நீடித்த தாய்லாந்து
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லாத அனுமதியை காலவரையின்றி நீட்டிப்பதாக தாய்லாந்து(Thailand) அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த விசா சலுகை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், தாய்லாந்தில் 60 நாட்கள் வரை இந்தியர்கள் விசா இல்லாமல் தங்கி இருக்கலாம் எனவும், உள்ளூர் குடியேற்ற அலுவலகங்கள் மூலம் அதை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா இல்லாத அனுமதி
இந்த நடவடிக்கை அதிக இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் எனவும் தாய்லாந்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்ப்பதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து அரசின் இந்த விசா இல்லாத சலுகை காரணமாக 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரையில் இந்தியா சுற்றுலா பயணிகளின் வரவு 16.17 மில்லியனாக அதிகரித்துள்ளதாக தாய்லாந்து குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |