கனமழையால் மூழ்கிய வீதி - சிரமத்தில் மத்தியில் பாடசாலை சென்ற மாணவர்கள்
திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/பாதிமா பாலிகா வித்தியாலயத்துக்கு செல்லும் வீதியானது கனமழை காரணமாக மூழ்கியதால் இன்று (26) பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
குறித்த பாடசாலைக்கு செல்லும் வீதியானது நீரினால் மூழ்கடிக்கப்பட்டதால் பாடசாலை மாணவர்கள் மழையையும் வெள்ள நீரையும் பாராது குறித்த வீதி ஊடாக நீரில் நனைந்து பாடசாலைக்கு சென்று வீடு திரும்பினர்.
மேலும் கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின் புதுக்குடியிருப்பு பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததுடன் மின்சார கம்பிகளும் தடைப்பட்டதுடன் போக்குவரத்தும் சில மணி நேரம் தடைப்பட்டது.
வெள்ளத்தில் தாழ்நிலப் பகுதிகள்
பின்னர் காவல்துறையினர், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் இணைந்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

கனமழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முள்ளிப்பொத்தானை,4ம் வாய்க்கால் பாலம்போட்டாறு உட்பட தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
குறித்த பகுதியின் மேலதிக நீரை வெளியேற்ற தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி மற்றும் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி களத்துக்கு சென்று உடன் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.



முதலாம் இணைப்பு
மூதூர் - இரால் பாலம்
பெய்துவரும் மழை காரணமாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இரால் பாலத்தை ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்து செல்கிறது.

இதன் காரணமாக இவ்வீதியால் பயணிப்போர் மிகுந்த அசௌகரிங்களுக்கு மத்தியில் பயணித்து வருகின்றனர்.
அத்தோடு பாலத்தோப்பூர் பகுதியிலுள்ள பல வயல் நிலங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுகிறன.
அத்தோடு பாலத்தோப்பூர் பகுதியில் உள்ள சுமார் 10 வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்பகுந்துள்ளது.எனினும் இடப்பெயர்வுகள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |