நாடு முழுவதும் மழை வீழ்ச்சி - இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
இன்றைய நாளுக்கான வானிலை தொடர்பான முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலநறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடையிடையே மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாடு முழுவதும் மழை

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சிலஇடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்றுவீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.