உயர்வடைந்துள்ள இலங்கை ரூபா - வெளியானது நாணய மாற்று விகிதம்!
இலங்கை ரூபா நேற்றைய ஒப்பிடுகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் திர்ஹாமுக்கு எதிராக சற்று உயர்வடைந்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் திர்ஹாமின் விற்பனை விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று 98.86 ஆக இருப்பினும், கத்தார் மற்றும் சவுதி ரியாலுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு சற்று குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி ரியால்
அதனடிப்படையில், விற்பனை விலை ரூபா 99.37 மற்றும் ரூபா 96.59 எனவும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 360.2221 ஆகவும் விற்பனைப் பெறுமதி 371.5791 ஆகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலர்
மேலும் பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி 433.5464 எனவும் விற்பனைப் பெறுமதி 450.2503 எனவும் பதிவாகியுள்ளது.
பிரித்தானிய பவுண்ட்
அத்துடன் யூரோ ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி 382.8269 ஆகவும் விற்பனைப் பெறுமதி 398. 4135 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

