டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த சில நாட்களாக சடுதியாக உயர்வடைந்துள்ளதுடன் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
நாணய மாற்று விகிதம்
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 331.05 ரூபாவாகவும், கொள்வனவு விலை 313.77 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், நேற்றுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பும் அதிகரித்துள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 349.99 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 330.19 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 392.39 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 370.63 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கணிசமாக அதிகரிப்பு
இந்த நிலையில், சில மணிநேரங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அண்மைய நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்து வருகின்றது. நிபுணர்களின் கூற்றுப்படி, ரூபாவின் மதிப்பு மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.