பணிகளை சரிவர செய்ய தவறிய மத்திய வங்கி - எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு
இலங்கை ரூபாவின் பெறுமதியை நிலையடையச் செய்வதும், அதனை சீராக கொண்டு செல்வதும் மத்திய வங்கியின் கடமையென பிவித்துரு ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
எனினும், அதனை சரிவர செய்ய மத்திய வங்கி தவறியுள்ளதாக கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம் வரக் கூடாது என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி குறைவடையும் நிலையில் இறக்குமதிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும்
வங்கியின் நாளாந்த சேவைகள்
அதேவேளை, ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும் நிலையில் ஏற்றுமதி தொடர்பான செயல்பாடுகளும் பாதிக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் ரூபாவின் பெறுமதி அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் குறித்த செயல்பாடு படிப்படியாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, வங்கியின் நாளாந்த சேவைகள் சரிவர நடக்கிறதா என்பது குறித்த கேள்வி தற்போது எழுந்துள்ளதாகவும் உதய கம்மன்பில மேலும் கூறியுள்ளார்.