டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (28) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 54 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 33 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 371 ரூபாய் 84 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 387 ரூபாய் 23 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபாய் 31 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 332 ரூபாய் 11 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 39 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 35 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191 ரூபாய் 32 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 201 ரூபாய் 49 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 56 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 228 ரூபாய் 22 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 295.67 ரூபாயிலிருந்து 294.93 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 305.68 ரூபாயிலிருந்து 304.91 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 295.21 ரூபாயிலிருந்து 294.46 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளவேளை விற்பனைப் பெறுமதி 304.50 ரூபாயிலிருந்து 303. 75 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 296.50 ரூபாயிலிருந்து 295.50 ரூபாய் மற்றும் 305.50 ரூபாயிலிருந்து 304.50 ரூபாயாககுறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |