டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (15) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய் 79 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 25 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 364 ரூபாய் 37 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 379 ரூபாய் 61 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311 ரூபாய் 10 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 324 ரூபாய் 77 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபாய் 16 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 221 ரூபாய் 65 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 188 ரூபாய் 25 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 198 ரூபாய் 39 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபாய் 11 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 224 ரூபாய் 51 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 293.46 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 303.39 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 292.48 ரூபாயாகவும் குறைவடைந்துள்ள வேளை விற்பனைப் பெறுமதி 301.75 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 293.75 ரூபாய் மற்றும் 302.75 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |