கழிப்பறை காகிதத்தில் பதவி விலகல்....! வைரலாகும் பெண் ஊழியரின் கடிதம்
பெண் ஊழியர் ஒருவர் கழிப்பறை காகிதத்தில் எழுதிய பதவி விலகல் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதை உணர்த்துவதற்காக நான் பதவி விலகலுக்கு இந்த காகிதத்தை தேர்வு செய்தேன். வெளியேறுகிறேன் என அந்த பெண் ஊழியர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நிறுவனம் ஒன்றில் இயக்குநராக பணியாற்றியவர் ஏஞ்சலா யோ என்பவரே தனது பதவி லிலகல் கடிதத்தை இவ்வாறு வேலைபார்த்த நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரல்
இந்த பதவி விலகல் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தனது சமூகவலைத்தள பதிவில் மேலும் தெரிவிக்கையில், நான் ஒரு கழிப்பறை காகிதத்தைப் போல தேவைப்பட்ட போது இழிவாக நடத்தப்பட்டேன். தேவை ஏற்பட்ட போது பயன்படுத்தப்பட்டேன். தேவை முடிந்ததும் மறு சிந்தனை இன்றி தூக்கி எறியப்பட்டேன். அந்த வார்த்தைகள் எனது நினைவை விட்டு அகல மறுக்கிறது.
ஊழியர்கள் உண்மையாக பாராட்டப்படுவதை உணர வைக்க வேண்டும். அவர்கள், நிறுவனத்தை விட்டு வெளியேறினாலும் நன்றியுணர்வுடன் வெளியேற வேண்டும்.
மன கசப்புடன் அல்ல. இந்த மாதிரியான அனுபவம் விசுவாசமின்மையை குறிக்காது.
சிறிய மாற்றங்கள் பெரிய தாக்கம்
நிறுவனத்தின் கலாசாரத்தைப் பற்றி அதிகம் பேசும் பாராட்டு என்பது தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமல்ல.
ஒரு நபர் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பதை பிரதிபலிப்பதுடன், அவர்கள் செய்யும் பணிகளையும், அவர்கள் யார் என்பதையும் எடுத்துக்காட்டும். பணியாளர்கள் தங்களை குறைத்து மதிப்பிடுவதாக உணர்ந்தால், அதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது.
பாராட்டுதலில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை இன்றே துவங்குங்கள் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
