ஹிருணிகாவின் வீட்டின் மீது மலக்கழிவு வீச்சு
house
toilet
hirunika premachandra
By Vanan
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டின் மீது மலக்கழிவு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று அவர் இதனைக் கூறியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“ஹிருணிகா இரும்பு பெண். அவர் குண்டர்களுக்கு அஞ்ச மாட்டார்.
அவர் மிக அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றை அரச தலைவர் இல்லத்திற்கு எதிரில் நடத்தினார்.
இதன் எதிரொலியாக ஹிருணிகாவின் வீட்டின் மீது மலக்கழிவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால், சிறிலங்கா பொதுஜன பெரமுனவிடம் தற்போது மலக்கழிவு துர்நாற்றம் வீசுகிறது” என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி