தக்காளி விவசாயிக்கு அடித்த அதிஷ்டம் - ஒரே மாதத்தில் பெரும் கோடீஸ்வரர்
இந்தியாவில் தற்போது தக்காளிக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.இதனால் தக்காளியை பயிரிட்ட விவசாயிகள் பாடு கொண்டாட்டம்தான்.
இவ்வாறு தக்காளியை பயிரிட்ட பல விவசாயிகள் ஒரே மாத்தில் பெரும் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.
அந்த வகையில் புனே மாவட்டம் ஜுன்னார் பகுதியைச் சேர்ந்த துக்காராம் என்பவரும் ஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
12 ஏக்கரில் தக்காளி விவசாயம்
இவர் தனக்கு சொந்தமான 12 ஏக்கரில் தக்காளி விவசாயம் செய்து வருகிறார்.இவரது அதிஷ்டம் தக்காளி விலை உச்சபட்சமாக உயர்ந்ததால், அவருக்கு ஜாக்பொட் அடித்துள்ளது.
இதனால் போட்டி போட்டுக்கொண்டு வியாபாரிகள் பலரும் அவரிடம் தக்காளி பெட்டிகளை வாங்கிச் சென்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13 ஆயிரம் பெட்டிகள் தக்காளி விற்ற துக்காராம், ஒன்றரை கோடி ரூபாய் வருமானமாக ஈட்டியுள்ளார்.
80 கோடி ரூபாய் அளவுக்கு தக்காளி விற்பனை
அவர் மட்டுமன்றி, அப்பகுதியைச் சேர்ந்த தக்காளி விவசாயிகள், சுமார் 80 கோடி ரூபாய் அளவுக்கு தக்காளி விற்பனை செய்து கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.