குவிக்கப்பட்டுள்ள தங்கம், தலைகீழாக புதைக்கப்பட்ட உடலம்...கல்லறையில் பொதிந்திருக்கும் மர்மம் என்ன!
ஆய்வாளர்களால் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால கல்லறையொன்று ஆச்சரியமூட்டுவதாகவும் மர்மம் நிறைந்ததாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய அமெரிக்க நாடான பனாமாவின் தலைநகர் பனாமா சிட்டியில் இருந்து 110 மைல்கள் தொலைவிலேயே அந்தக் கல்லறை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்லறையை திறந்து பார்த்தபோது அதில் தலைகீழாகப் புதைக்கப்பட்ட சடலத்தையும் குவியல் குவியலாக கிடந்த கணக்கிட முடியாத தங்கத்தையும் ஆய்வாளர்கள் மீட்டுள்ளனர்.
மோசமான ரகசியம்
மேலும் அது அங்கு உயர் பொறுப்பில் இருந்த மத குரு ஒருவர் புதைக்கப்பட்ட கல்லறை என்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், தவிரவும் அந்தக் கல்லறையில் குவிக்கப்பட்டிருந்த தங்கத்தின் அளவு, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை மலைக்க வைத்துள்ளது.
இதன் பின்னணியில் மோசமான ரகசியம் இருக்கலாம் என்று கணித்திருக்கும் ஆய்வாளர்கள், அந்தக்கல்லறையில் பெயரிடப்படாத அந்த மதத் தலைவருடன் 32 நபர்களும் புதைக்கப்பட்டுள்ளதை இதுவரை கண்டுபிடித்துள்ளனர்.
அந்த மதத் தலைவர் இறந்த பிறகு அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல இவர்கள் உதவுவார்கள் என்று அவர் நம்பியதால் அவருடன் 32 பேர் புதைக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குவியல் குவியலாக தங்கம்
மேலும், அந்த மதத் தலைவரின் சடலம் தலைகீழாக புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது மாத்திரமன்றி அந்த கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை இதுவரை முழுமையாக உறுதி செய்யப்படவில்லை.
தவிரவும் இந்தக் கல்லறையில் தங்க சால்வை, தங்க தொப்பிகள் கொண்ட திமிங்கிலப் பற்கள் உட்பட குவியல் குவியலாக தங்கம் மீட்கப்பட்டுள்ளது, மேலும் அந்த மத குருவுடன் புதைக்கப்பட்டவர்கள் பெண்களாக இருக்கவும் வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தரப்பு கூறியுள்ளனர்.
அங்கு பொதுவாக உயர் பொறுப்பில் இருக்கும் மதத் தலைவர்களை இறந்த பின்னர் வழி அனுப்பும் சடங்காக அதனை செய்திருக்கலாம் என்றும் அவர்கள் நம்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |