இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு - இலங்கைக்கு தொடரும் நெருக்கடி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு இன்றையதினம் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த கூட்டத்தொடர் ஜூலை 14 வரை தொடர்ந்து இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திர தரப்பு தகவல்களின் படி, பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பாக வாய்மூல அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கைக்கு நெருக்கடி
இதன்போது அவர் இலங்கையின் பொறுப்புக்கூறல் பிரச்சினைகளில் முன்னேற்றம் இன்மை என்பதை சுட்டிக்காட்டுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரம் ஜெனீவாவில் நடைபெறும் அமர்வுகளில், இலங்கை தொடர்பான முக்கிய - கோர் குழு நாடுகள் முறையான அறிக்கையை வெளியிடவுள்ளன.
கடந்த ஆண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை தன்னிச்சையாக கைது செய்தமை, பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் இல்லை மற்றும் பொருளாதாரக் குற்றங்கள் என்பன இதில் சுட்டிக்காட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS