நாளை முதல் ஊரடங்குச்சட்டம் - அரசாங்கம் அறிவிப்பு
curfew
srilanka
shavendrasilva
By Jaso
நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, நாடுமுழுவதும் நாளை(16) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்படும்.என்றும் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி