நாளை எட்டரை மணித்தியாலங்கள் மின்வெட்டு - வெளியானது அறிவிப்பு!
நாட்டில் நாளைய தினம் மின்வெட்டை மேற்கொள்வது தொடர்பான தகவலை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளைய தினம் எட்டு மணித்தியாலங்களும், முப்பது நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
அந்த வகையில் A, B, C, D, E, F ஆகிய பகுதிகளுக்கு காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 4 மணிமுதல் மாலை 7 மணிவரை 3 மணித்தியாலங்களும், இரவு 9 மணிமுதல் இரவு 10.30 வரை ஒன்றரை மணித்தியாலமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு நண்பகல் 12 முதல் மாலை 4 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை 3 மணித்தியாலங்களும், இரவு 10.30 முதல் நள்ளிரவு 12 மணிவரை ஒன்றரை மணித்தியாலங்களும்,
P, Q, R, S ஆகிய பகுதிகளுக்கு காலை 8 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை 4 மணித்தியாலங்களும் மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரை 3 மணித்தியாலங்களும், இரவு 9 மணி முதல் நள்ளிரவு 10.30 வரை ஒன்றரை மணித்தியாலங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
T, U, V, W ஆகிய வலயங்களுக்கு இரவு 10.30 முதல் நள்ளிரவு 12 மணிவரையும், M, N, O, X, Y, Z ஆகிய வலயங்களுக்கு அதிகாலை 5.30 முதல் காலை 9 மணிவரை மூன்றரை மணித்தியாலங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.