நாளை யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள அடையாளப் போராட்டம்!
யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக நாளைய தினம் (28) ஒருமணி நேர அடையாளப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்காக ஈ.பீ.எப் மற்றும் ஈ.ரீ.எப் (EPF & ETF ) நிதியங்களை அரசாங்கம் பயன்படுத்த முனைவதற்கு எதிராக நாளை மதியம் 12 மணி முதல் 01 மணி வரையில் குறித்த அடையாளப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
09 சங்கங்கள் இணைந்து
இப்போராட்டத்தை பல்கலைக்கழக ஊழியர் சங்கம், வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், பொது முகாமைத்துவ உதவியாளர் சேவைச் சங்கம், வடமாகாண சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் சங்கம், வடமாகாண கால்நடை போதானாசிரியர் சங்கம், சிறிலங்கா தபால் தொலைத்தொடர்பு சேவை உத்தியோகத்தர் சங்கம், வடமாகாண அரச சாரதிகள் சங்கம் மற்றும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கம் ஆகிய 09 சங்கங்கள் இணைந்து முன்னெடுக்கவுள்ளன.