சபையில் பொங்கியெழுந்த எம்.பி அர்ச்சுனா: அரசு தரப்பு வழங்கிய பதிலடி
நாடாளுமன்றில் பேசுவதற்கான நேரம் ஒதுக்கப்படாமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் எதிர்க் கட்சிக்கு பொறுப்பான விடயம் என ஆளும் கட்சி தெளிவு படுத்தியுள்ளது.
நாடளுமன்றில் தனக்கு பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) இதனை தெரிவித்தார்.
அத்தோடு, நாடாளுமன்றில் அர்ச்சுனாவிற்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாமை ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு செயற்பாடு என்றும் அவருக்கு பேசுவதற்கு நேரம் வழங்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சி தலைவருக்கு முற்றுமுழுதாக இருப்பதாகவும் அது தங்களுக்கானது இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அர்ச்சுனா எதிர்கட்சியானாலும் ஆளுங்கட்சியானலும் அரசாங்கத்திற்கு எத்தனை மடங்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் தங்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிர்கட்சியில் பேசுவதற்கான நேரத்தை ஒதுக்குமாறு சபாநாயகரிடம் ஏற்கனவே கோரிக்கை ஒன்றை முன்வைத்ததாகவும் அவ்வாறு செய்யாதிருப்பது நாடளுமன்றை இழிவு படுத்தும் செயல் என்றும் அமைச்சர் தொடர்ந்தும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |