யாழ்ப்பாணத்தில் இன்றிரவு நடந்த குண்டுவீச்சு -பெண் படுகாயம்
Jaffna
Sri Lanka Police Investigation
Bomb Blast
By Sumithiran
யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடு ஒன்றின் மீது இன்றிரவு 9.20 மணி அளவில் பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முகத்தை துணியால் மறைத்தவாறு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் குறித்த வீட்டில் ஜன்னல் கதவு என்பவற்றை அடித்து உடைத்து பெட்ரோல் குண்டு வீசி வீட்டின் பல பொருட்களை எரித்து சேதமாக்கியுள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தாயார் படுகாயம்
வீட்டில் இருந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.