இன்று இரவு ஏற்படவிருந்த பாரியவிபத்து: மயிரிழையில் தவிர்ப்பு
இன்று இரவு ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்று அதிகாரிகளின் உடனடி செயற்பாட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.
தெமோதர புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் பாதையில் மரம் ஒன்று வீழ்ந்ததன் காரணமாக இன்று இரவு மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டது.
மரம் முறிந்து விழும் நிலையில்
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் தெமோதர புகையிரத நிலையத்தை அடையவிருந்த நிலையில் புகையிரத பரிசோதகரின் பரிசோதனை காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
குறித்த மரம் முறிந்து விழும் நிலையில் இருந்ததைக் கண்ட வீதி பரிசோதகர், உடனடியாக இது தொடர்பில் தெமோதர புகையிரத நிலைய அதிபருக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும் விபத்து தவிர்ப்பு
இதன்படி, உடனடியாகச் செயற்பட்ட நிலைய அதிபர், ரயில் புகையிரத நிலையத்திற்குள் நுழைவதற்கு உரிய சமிக்ஞைகளை வழங்காதவாறு நடவடிக்கை எடுத்துள்ளார். பின்னர், அந்த இடத்தைச் சரிபார்க்கச் சென்றபோது, குறித்த மரம் முறிந்து விழுந்தது. இதனால்,ஏற்படவிருந்த பெரும் விபத்தை தவிர்க்க முடிந்தது.
பின்னர், ரயில் சுமார் இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டு, ரயில் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர், ரயில் கொழும்புக்கு சென்றது.